Wednesday, December 1, 2010

பாட்டி சொல்லாத கதை

பாட்டி சொல்லாத கதை

என் ஆர்ட்டிக் வெளியிலும்
எங்கோ அடிமூலையில்
சுவர்க்கோழி இரைச்சலாய்
உன் கொக்கரிப்பு
இருளில் தொலைந்த நிழலாய்
ஈரவிழிகளோடு என் இருப்பு
அதில் நீ உப்புச் சுவைத்தாய்
மூச்சு முட்டும் உன்
ஆல்கஹால் அரவணைப்பில்
கருகிக்கிடந்த பொழுதுகளைக்
கிளறிப் பார்க்கிறது மனம்
கிழித்தெறிந்த தேதிக் கழிவுகளில்
எலிசெத்த நாற்றமாய் உன்பதிவு
சுயம் உணர்ந்த பொழுதொன்றில்
கட்டுடைத்து வெளியேறினேன்
உன் கட்டுக்கதைகளில்
காற்றில் பறந்தது பத்தினிப்பட்டம்
ஆக்சிஜன் வெளியில் சிறகசைத்தேன்
பணியிடமாற்றம் என்று பரிகசித்தாய்
கூடுதிரும்பச் சொன்னது தாய்மரம்
கூண்டு தயாரிப்பவர்களின் நேச வலைப்பின்னல்
கடந்து நடந்தேன் கவனமாய்
கால்களை விலங்கிட்டது காலச்சிறை
சுதந்திரம் என்பது தனிமைப்படல்
பாட்டி சொல்லாத கதை
உன் மாற்றமில்லாக் கூட்டில்
சிறகறியா மற்றொரு பறவை
கால்மேல் கால்போட்டு வீற்றிருக்கிறது
உன் அதிகாரம் காலங்காலமாய்
பாதையெங்கும் துளைக்கும்
பார்வைகளை களையெடுகின்றது
என் மையூறும் ஆறாம்விரல்
நெஞ்சாங்குழியில் நெருடுகிறது
உன் கொக்கரிப்பும் என் அவமதிப்பும்
உணர்த்தவேண்டும் பறவைகளுக்கெலாம்
சுயத்தையும் சிறகையும்

Saturday, September 11, 2010

சன்னல் வழியே

பார்த்துக்கொண்டே வந்தோம்

வழியெல்லாம் இயற்கையை

நான் ரசிக்க

அவன் கோயிலைத் தேடினான்

ஆளற்ற பெருவெளியில்

சிலையொன்று தென்பட்டது

வேல வில்லா அடையாளம் theriyavillai

கண்ணை மூடினான்

கன்னத்தில் போட்டுக்கொண்டான்

என்ன சிலை என்றேன்

முருகன் என்றான்

வில் மாதிரி தெரிந்ததே என்றேன்

aப்படின்ன ராமனா இருக்கும் என்றான்

வேடியப்பன் பற்றியெல்லாம் அவனுக்கு

தெரிந்திருக்க நியாயம் illai

என் சிரிப்பில் அவன் மதச்சாயம்

வெளுத்ததை அறிந்துகொண்டான்

எனக்கு எல்லாம் ஒன்றுதான் என்றான்

அந்தப் பக்கம் பார்த்தேன்

தேவாலயமும் mஅசூதியும் தெரிந்தன

அவனுக்குத் தெரிந்திருக்குமோ

தெரியவில்லை

பெரியார் சிலை வந்தது

இறங்கிக் கொண்டேன்

கையசைத்தேன் கவனிக்க வில்லை

அவன் கண்கள்

கோயிலைத் தேடி..

ஒற்றை பனித்துளிக்குள்

உலகம்

அடங்கியது

சூரிய thaagam

பிரமாஸ் ஏவுகணை வெற்றிகரமாய்

விண்ணில் பாய்ந்ததாம்

பூமிப்பந்தையொத்த நெருப்புக்கோளம்

ஏவுகணையின் கீழ்..

படம் பார்த்துக் குழல் சொன்னான்

அய்யய்யோ அப்பா

ராக்கெட் வெடிச்சிடிச்சி

அவன் புரிதலில்...

நமக்குத்தான் புரியவில்லை

அந்த வெடிப்பு பூமிக்கானதென!

இருட்டுப் பானையில்
கல்லெறிந்தது யார்?
உடைப்பெடுத்துப் பாயும் olli
திசையெல்லாம் கரைபுரளும்
சுகமாய் நீந்திக் களி
காட்டாற்று வெள்ளமது
காணாமல் போகுமுன்
karai சேர் பததிரமாய்
மறு பானைக்காய்
மண் திரட்டுகிறான்
kuyavan

Friday, September 3, 2010

மரணக் கணக்கு

பிணங்களின் பார்வையில்
மரணங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன
எனக்குத் தெரிந்து எந்தப் பிணமும்
எதிர்வினை புரிந்ததில்லை
சத்தியாகிரகப் பாணியில்
அழுகி நாறுவதைத் தவிர.