தந்தனத் தானா தந்தானா தன தந்தனத் தானா தந்தான
தந்தனத் தானா தந்தானா தன தந்தனத் தானா தந்தான
சேத்து நடுவுல நாத்து நடயில பார்த்துட்டுப் போனீங்களே - அந்த
ஆத்தங் கரையில் மாலை வரையிலும் காத்திட்டு நின்னீஙகளே
பாத்த கிறுக்குல பாவிமக புள்ள தூக்கமும் கொள்ளவில்லே
காத்து கருப்போட சேட்டை யிதுவுன்னு ஊருககுள் ரொம்ப தொல்லே
தந்தனத் தானா தந்தானா சாமிதொர தான் வந்தானா
தந்தனத் தானா தந்தானா சாமிதொர தான் வந்தானா
ஓலக் குடிசையில் எட்டிப் பார்க்கும் நிலா சாமியுன் காதலுங்க
ஏழை முதுகுல வாட்டும் சுமையாச்சு தாங்க முடியலீங்க
ஆலங் கிளையிலே ஒத்தக் கிளியா சோகத்தில நின்னிருப்பேன்
மாலை தரப்போற மாப்பிள்ளை நீர்வந்தா செக்கச் சிவந்திருப்பேன்
தந்தனத் தானா தந்தானா சாமிதொர தான் வந்தானா
தந்தனத் தானா தந்தானா சாமிதொர தான் வந்தானா
அத்தைமக னுன்னும் மாமன் மகனுன்னும் சுத்தியே வர்றாங்க
மத்தவரை நானும் கட்டிக்கக் கூடாதாம் சட்டந்தான் பேசுறாங்க
பச்ச வெறகுல வச்ச நெருப்பா உள்ளம் புகையுதுங்க
குத்தங் குறையேதும் வந்ததுவிடு மோன்னு கும்பி எரியுதுங்க
தந்தனத் தானா தந்தானா சாமிதொர தான் வந்தானா
தந்தனத் தானா தந்தானா சாமிதொர தான் வந்தானா
ஆசைப்பட்ட மனம் ஏங்கித் தவிக்குது சேர்த்திட நாதியில்லே
மீசைவச்ச இனம் மீறிவிடலாம் பேதைநான் என்ன செய்ய
வாக்குக் கொடுத்தவன் பாக்கு வைக்கத்தான் வரணும் வாசலிலே
பாக்கியம் இல்லேயே பாவந்தான் செஞ்சேனோ வரமும் கூடவில்லே
தந்தனத் தானா தந்தானா தன தந்தனத் தானா தந்தான
தந்தனத் தானா தந்தானா தன தந்தனத் தானா தந்தான
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Follower ஆகி விட்டேன்… தொடர்கிறேன்...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_12.html) சென்று பார்க்கவும்... நன்றி...
நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றி…
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...
வாக்குக் கொடுத்தவன் பாக்கு வைக்கத்தான் வரணும் //
ReplyDeleteசிறப்பான படைப்புக்குப் பாராட்டுக்கள்..
உங்கள் குரல் வழியே விழிகளை தீண்டுகிறது பாடல்.
ReplyDelete